உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்

உங்களுக்குள் ஒளிந்துள்ள புதையல்



        அளவற்ற செல்வங்கள் உங்கள் அருகில் மிக மிக அருகில் உள்ளது. அவற்றை நீங்கள் உங்கள் ஆழ்மனதின் உதவியுடன் அடைய முடியும். நீங்கள் மகிழ்ச்சியுடனும், அன்புடன், புகழுடனும், ஆனந்தமாக, வாழ வழிவகை செய்யும்.


ஒருமுறை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் இந்த அற்புத சக்தியை உணர்ந்து கொண்டால் உங்களது வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும், நீங்கள் கவர்ந்திழுக்க முடியும்.

                 நீங்கள்   ஒரு செல்வந்தராகவோ பணக்காரனாகவோ விரும்பினால் அவ்விருப்பத்தினை உங்கள்  ஆழ்மனதிடம் உணர்வுபூர்வமாக, அன்பாக, தெரியப்படுத்துங்கள். அது உங்களுக்கு ஏற்றார்போல் சரியான விடை அளிக்கும்.

            உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான ஏதோ ஒன்றை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாத போதும் கூட, அந்தப் பொருளை நீங்கள் வாங்கி விட்டது போல் உங்கள்  மனக்காட்சியில்  அப் பொருளை உருவாக்கி அது உங்கள் கையில் தான் உள்ளது போல் மனத்திரையில் கண்டு அதை உண்மை என்று உணருங்கள்.  நீங்கள் அறியாத ஏதோ ஒரு வழியில் அது உங்களை வந்து சேரும்.

நன்றி
கோ.கோபிநாத்.


Post a Comment

Previous Next

نموذج الاتصال