Flipkart Offer

Monday, December 31, 2018

இலக்குகளுடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய இலக்குகளுடன் இந்த புதிய வருடத்தை தொடங்குவோம்.

 100 இலக்குகளை அடையுங்கள் 

இந்த வருடத்தில் நீங்கள் சாதிக்க விரும்பும் நூறு இலக்குகளை சாதனைகளை ஒரு பட்டியலிடுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் அடைய விரும்பும் சாதனைகள், செய்ய விரும்பும் நற்செயல்கள்,  இலக்குகள் என அனைத்தையும் எழுதி வையுங்கள். 

உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள அனைத்தும் சரியான நேரத்தில் சரியான முறையில் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று கற்பனை செய்யுங்கள். 

இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பரிசு அளிப்பதாக கற்பனை செய்யுங்கள். 

புதிய விஷயங்கள் நற்சிந்தனைகள் தோன்றினால் அதையும் உங்கள் விருப்பப் பட்டியலில் எழுதிக் கொள்ளுங்கள். 

உங்கள் விருப்ப பட்டியலை படித்து அவற்றை அடைந்தது போல் கற்பனை செய்யுங்கள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பயிற்சி இது. 

தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் வெற்றியை ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வணக்கம்

நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் 
கோ. கோபிநாத்


Sunday, April 8, 2018

மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்


மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்

மனஅழுத்தம் குறைக்க சில
வழி முறைகள்.

இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாதுஎன்று சொல்லப்பழகுங்கள்.

காலை நேர நடைபயிற்சி செய்யுங்கள் மனதிற்க்கு புத்துணர்வு தரும்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். இனிமையான பாடல்களை கேட்பது, நகைசுவையுணர்வு, அமைதி, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடுங்கள்.

பிறருக்காக எதையேனும உதவி  செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


அனைத்து மனஅழுத்தத்திற்க்கு மாபெரும் மந்திர சொல் - 


அனைத்தும் கடந்து போகும்.
(அன்று)

எவ்வளவே பார்த்துட்டேம் இத பார்க்க மாட்டேமா!!! 
(இன்று)

நடிகர் பிரேம்ஜி வசனம்.

நீங்கள் மன அழுத்தம் அடையும் போது இதனை நினைத்து பாருங்கள் உங்கள் வாழ்வில் மாயாஜாலம் நிகழும்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்...!

அன்புடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்.

Thanks To share Your Friends

Main Page

Wednesday, April 4, 2018

கற்பனை தான் உங்கள் தொழிலை உயர்த்தும் ...



கற்பனை தான் எல்லாம்
    அது வாழ்க்கையில்
வரப் போகும் வசந்தங்களின்
    முன்னோட்டம்
     -   ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கற்பனை தான் படைப்பின் துவக்கம்.

     நீங்கள் விரும்பும் ஒன்றை மிக ஆழமாகவும், துல்லியமாகவும் கற்பனை செய்யுங்கள். நீங்கள் விரும்பியது உங்களது வாழ்வில் நடந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள்.

     ஒருவர் ஒரு சூப்பர் மார்கட் ( SUPER MARKET) நடத்த விரும்புகிறார். அந்த விருப்பத்தை அவருக்கு நிறைவேற்றியது அவரது கற்பனைதான்.

     ஒரு குறிப்பட்ட நாட்களுக்குள் அவரது விருப்பம் நிறைவேறிவிட்டதாக கற்பனை செய்தார்.

     எனது சூப்பர் மார்கெட்டிற்க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்கள் மிக தரமானதாகவும், வாடிக்கையாளர்களின் மனதிற்க்கு இதமானதாகவும் இருப்பதால் நான் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கிறேன். எனது கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் எனது வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.

     “ நேற்றைவிட இன்று எனது தொழில் மிக சிறப்பாகவும் ஆனந்தமாகவும் லாபகரமாகவும் நடைபெற்றதற்க்கு ஆத்மார்தமான நன்றி நன்றி நன்றி…”

     கற்பனை செய்யுங்கள் உங்கள் தொழிலை உயர்த்துங்கள் ...

அன்புடனும் நன்றியுணர்வுடனும்

கோ. கோபிநாத்

உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ...

Main Page

Friday, March 16, 2018

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள ….



மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற இதனை தினமும் காலை இரவு தூங்கும்முன் மனதார படியுங்கள் – வெற்றி உங்களுதே!!!

எனக்கு படிப்பது மிகவும் பிடிக்கும்.

நான் தேர்வுகளை நேர்மையாக மனநிறைவான எண்ணங்களுடன் எழுதுகிறேன்.

நான் இதுவரை வெற்றிபெற்ற அனைத்து தேர்வுகளுக்கும் நன்றி.

என்னால் எதையும் படிக்கமுடியும் எதையும் அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளும் என்னுள் படிப்பதற்கான் ஆர்வம் வளர்ந்து கொண்டே வருகிறது.

என் நேர்மறையான (Positive) எண்ணங்களுக்கு நன்றி.

நான் படிப்பதற்க்கு ஏற்ற நல்ல சூழ்நிலைகள் அமைந்ததற்க்கு நன்றி.

நான் படித்ததை எனக்கு ஞாபகபடுத்தும் ஞாபகசக்திக்கு மிக்க நன்றி.

நான் ஆழ்ந்த கவனத்தோடு படிக்கவும், என் அறிவை வளர்க்கவும் பெரிதும் உதவிய கல்விக்கு நன்றி.

எனக்கு கல்வியை அளித்த ஆசிரியருக்கு நன்றி.

நான் பாடங்களை முழுமையாக புரிந்து படிக்கிறேன்.

என் கவனம் முழுவதும் தேர்வில் நான் பெறும் வெற்றியை நோக்கியே உள்ளது.

நான் இந்த பொதுத்தேர்வில் பெறபோகும் நல்ல மதிப்பெண்காளிக்கு நன்றி.

இந்த பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்க்கு நன்றி.

நான் கவலைகள், அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டதால் அதிக மதிப்பெண்களை பெற்றேன்.

தேர்வின் முடிவுகள் என் வாழ்க்கையின் நல்ல மாற்றத்தையும் புதிய துவக்கத்தையும் அளிப்பதற்க்கு நன்றி.

தேர்வின் வெற்றியை நான் இன்றே உண்ர்கிறேன்.

தேர்வின் வெற்றி என் வாழ்வின் அடுத்த நிலைக்கு என்னை அழைத்து செல்கிறது.

என் இலக்குகள் நோக்கியே என் பயணம் முழுவதும் உள்ளாது.

இன்று நடைபெறும் தேர்வில் நான் பெறபோகும் அதிக 
மதிப்பெண்களுக்கு நன்றி.

நான் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க காரணமாக உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

நான் எழுதிய அனைத்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்களும் தேர்வில் மாபெரும் வெற்றி பெற்றதற்க்கு நன்றி.

நான் புத்திசாலி என்பதை நிரூபித்தேன்.

என்னுடைய கல்வியை நான் மதிக்கிறேன் ஏனெனில் அது என்னை 
உலகிற்க்கு அடையாளம் காட்டியது.

நான் இத்தேர்வில் மிக சிறப்பான முறையில் எதிர்கொள்ள எனக்கு துணைபுரிந்த

என் பெற்றோர்களுக்கு நன்றி நன்றி நன்றி

என் ஆசிரியர்களுக்கு நன்றி நன்றி நன்றி

என் நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி


அன்புடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்


share to All...

Friday, January 12, 2018

நம்பிக்கை விதிதான் வாழ்க்கை விதி.

நம்பிக்கை விதிதான் வாழ்க்கை விதி.





நம்பிக்கை என்பது உங்கள் மனதில்  தோன்றும் ஓர் எண்ணமே உங்களை  பாதிக்கும் அல்லது துன்புறுத்தும் பொருட்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதீர்கள்.

உங்கள் ஆழ்மனத்தின் சக்தி உங்களை குணபடுத்த வல்லது, உத்வேகமூட்ட வல்லது, பலபடுத்த வல்லது, வளாமாக்க வல்லது என்று நம்புங்கள். நீங்கள் நம்புவதை போன்றே உங்காள் வாழ்வில் நடக்கும்.

நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்

Wednesday, January 10, 2018

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்


ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது .

அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்
ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் .

குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.

"நாம் நம்மை சுற்றி எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .

நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .

அன்புடனும் நன்றியுணர்வுடனும்
கோபிநாத்

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...