Flipkart Offer

Saturday, September 16, 2017

சூப்பர் சேல்ஸ்மேன் (Super Salesman) ஆவது எப்படி



இனிய வணக்கம் நட்புக்களே...  
நம் இலக்கை எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் பயணத்தில் நாம் முன்னேறிச் செல்ல முடியும். - ஆரிசன் ஸ்வெட் மார்டன்"
விற்பனை துறையில் உள்ள நன்பர்கள் இந்த பதிவுகளில் வரும் செயல் யிற்சிகளை print எடுத்து வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விற்பனை பற்றிய மன விளையாட்டு

செயல் பயிற்சிகள்

1.​இன்றே ஒரு முற்றிலும் தன்னம்பிக்கையுடைய, உயர் சுயமதிப்பு கொண்ட விற்பனையாளர் ஆவதற்கு முடிவெடுங்கள். 'என்னை நான் விரும்புகிறேன்' என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ளுங்கள்.

2.​உங்கள் தொழிலில் மிகச் சிறந்தவர் என்று தொடர்ந்து கற்பனை செய்து பாருங்கள்; நீங்கள் 'உருவாக்கிக் காண்கின்ற' மனிதராய் நீங்கள் இருப்பீர்கள்.

3.​என்ன நடந்தாலும் விட்டுக் கொடுப்பதில்லை என்று முன்னரே தீர்மானம் செய்யுங்கள். நீங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். தோல்வி ஒரு விருப்பத் தேர்வு அல்ல.

4.​நிராகரிப்பை தனிப்பட்ட முறையில் ஏற்க மறுத்திடுங்கள். விற்பனையில் இது நடப்பது இயற்கை, பருவ நிலை போன்றது என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

5.​உங்கள் துறையில் முன்னணியில் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள். மிக வெற்றிகரமான மற்றும் மிக உயர் ஊதியம் பெறுவோரை உங்கள் முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கண்டுபிடியுங்கள். அதே பலன்கள் கிடைக்கும்வரை அவர்கள் செய்வதையே செய்யுங்கள்.

6.​உங்கள் தொழிலில் உள்ள உயர் 20 சதவீத மனிதர்களை சேர்வதென இன்றே ஒரு முடிவு செய்யுங்கள்; ஞாபகத்தில் வையுங்கள். உங்களைவிட வேறு எவரும் சமர்த்தர் இல்லை. உங்களைவிட சிறந்தவர் எவரும் இல்லை.அறிவுக்குப் பொருந்திய அளவில் யாரும் எதைசெய்திருந்தாலும், அதை உங்களாலும் செய்ய முடியும்.

7.​எந்த வழியிலாவது உங்களுக்கு உதவக்கூடிய புதிய யோசனை என்று நீங்கள் நினைத்தால், அதைச் செயல்படுத்திப் பாருங்கள்.ஒரு முயற்சி செய்து பாருங்கள்.மேலும் அதிகமானவற்றை நீங்கள் முயற்சி செய்தால் இறுதியில் வெற்றிபெறும் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்.

(from "THE PSYCHOLOGY OF SELLING (Tamil)" by BRIAN TRACY)

இந்த புத்தகத்தினை வாங்கி படிக்க :
  In Tamil : https://amzn.to/2GJQjDe
  In Engligh : https://amzn.to/2pW5Pl3

நன்றி.நன்றி..நன்றி....

No comments:

Post a Comment

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...