Flipkart Offer

Sunday, December 31, 2017

வாழ்க்கை மாற்றத்திற்கான சுயபிரகடனங்கள்



இனிய வணக்கம் நட்புக்களே..
வாழ்க்கை மாற்றத்திற்கான சுயபிரகடனங்கள்


இனிய ஆங்கில வருட வாழ்த்துகள்

அப்படியே நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது உங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

இதில் முக்கியமான விஷயமே நீங்கள் பிரபஞ்சத்தோடு ஆழமான தொடர்பு கொள்ளக்கூடியதுதான். ஆகவே மிக ஆழமாகவும் வலிந்தும் உங்கள் குரலிலே இந்த சுயபிரகடனங்களை கூறுங்கள்,

உங்கள் எண்ணங்களை உண்மையாக்குங்கள்.

1.
என் வாழ்க்கையை அருமையாக ஆனந்தமாக வடிவமைக்கிறேன்.
அதன் அடித்தளத்தை நான் கட்டுகிறேன்.அதில் இருக்க நல்லனவற்றை நான் தேர்வுசெய்கிறேன்

2. நான் அளவற்ற சக்தியுடனும் மகிழ்ச்சிடனும் இருக்கிறேன்.

3. என் உடல்  ஆரோக்கியமாக இருக்கிறது. என் மனம் புத்திசாலித்தனமாகவும்  ஆன்மா சாந்தமாகவும் இருக்கிறது

4. என்னிடம் எல்லையற்ற திறமைகள் உள்ளன. அவற்றை இன்றிலிருந்து  நான் சரியான முறையில் செயல்படுத்துகிறேன்.

5. நான் அமைதியும் அன்புமாயுள்ளதால் கோபம் இன்னிடம் வர மறுக்கிறது.

6. என்னை நோக்கி வெற்றி என்றென்றும் முடிவிலா பாய்கிறது.

7. படைப்பு ஆற்றல் என்னை ஆரதழுவுகிறது. அது என்னில் புதிய யுக்திகளை  யோசனைகளை அளிக்கிறது.

8. சவால்களை முறியடிக்க தேவையான திறமைகள் என்னிடம் அளவற்று  உள்ளன. நான் ஒரு ஆற்றல்தளம்

9. மக்கள் அன்புடனும் ஆதரவுடனும் என்னை மதிக்கிறார்காள்.

10. என்னுடைய முயற்சிகளை அனைத்தையும் இப்பிரபஞ்சம் ஆதரிக்கிறது. என் கண் முன்னே என்னுடைய  கனவுகள் அனைத்தும் உண்மையாகின்றன.

11. மனதின் தெளிவோடும் ,இதயத்தின் வலிமையோடும் இன்று நான் எழுகிறேன்.

நல்லனவற்றை பகிருங்கள்!!!


அன்புடனும் நன்றியுணர்வுடனும்

கோபிநாத்


Saturday, December 30, 2017

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!




ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை -

1)
அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
 
பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2)
உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3)
அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4)
ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக       86,400 ரூபாய் வரவு வைக்கப்படும்

5)
எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6)
வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது.
.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே?
.

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86,400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்கணக்கில் 86,400 நொடிகள் வழங்கப்படுகிறது.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86,400 வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக  ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

Main Page

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...