நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம்
(நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என மாற்றிக் கொள்ளளாம். )
நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்
நான் அதித உயிர் சக்தி கொண்டு ஆரோக்கியமாக ஆனந்தமாக உள்ளேன்
நான் நல்ல ஆரோக்கியமாக இருக்க என் நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு பெரும் உதவி செய்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி
என் நோய் எதிர்ப்பு சக்தி என்னை பாதுகாத்துக் கொண்டு இருப்பதற்கு நன்றி.
நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு நாளும் அதிகப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
என் நோயெதிர்ப்பு சக்தியினால் நல்ல உடல் நிலையுடன், ஆரோக்கியமாக உள்ளேன்.
எந்தவொரு நோய்த்தொற்று கிருமிகளிடமிருந்து என்னை பாதுகாக்கும் என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி நன்றி நன்றி...
"கவனம் போகும் இடத்தில் சக்தி பாயும்"
நம் உடல்நிலை ஆரோக்கியத்தைப் பற்றி நல்ல ஆரோக்கிய சிந்தனையை கொண்டு இருந்தால் ஆரோக்கியத்துடன் நாம் இருக்க முடியும்...
நம் கவனம் முழுவதும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக நாம் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதொரு ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தினால், நல்ல ஆரோக்கிய உடல் நிலையைப் பெற முடியும்.
" நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நிலையுடன் ஆரோக்கியத்துடன் இருந்து கொண்டிருப்பதற்கு நன்றி நன்றி நன்றி"
இதனை மனதார ஆழ்மனதில் உரக்கச் சொல்லுங்கள். இதன் மாற்றத்தை காணுங்கள்
நன்றி
#ஈர்ப்பு_விதி
கோ.கோபிநாத்


Post a Comment

Previous Next

نموذج الاتصال