Flipkart Offer

Wednesday, September 20, 2017

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்



வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்

 உங்கள் சிரிப்பு மூலம் உங்களை நீங்களே குணப்படுத்தலாம்.

என்ன மன உளைச்சலாக இருந்தாலும் உங்கள் மனதையும் எளிதாக சரி செய்யலாம்.

ஒரு நபர் தனக்கு குணப்படுத்த முடியாது மிகப்பெரிய உயிர்கொல்லி நோய் இருப்பதை மருத்துவர்கள் கூறினார்கள்.

ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு விதித்தார்கள்.

அவர் ஆறுமாதம் செய்தது ஒன்றே ஒன்று தான் தினமும் எப்பொழுதும் நகைச்சுவை படங்களை பார்த்து எப்போதும் வயிறு குலுங்க சிரித்து கொண்டே சந்தோஷத்துடன் இருந்தார்.

எந்தவித மருத்துவ சிகிச்சையும் மருத்துவரையும் அணுகவில்லை அவர் சிரித்து சிரித்து மன மகிழ்ச்சி அடைந்தார் அதனால் அவர் உடலில் உள்ள உயிர்க்கொல்லி நோய் மறையத் தொடங்கியது. ஆறு மாதத்திற்குள் அவர் பரிபூரண உடல் ஆரோக்கியம் பெற்றார்.

 உங்கள் மனம் உங்களிடம் இருந்தாலும் நீங்கள் எதையும் சாதிக்கலாம்.

 அவர் தனது உடலில் உள்ள எல்லா எதிர்மறை எண்ணங்களையும் அவரது மகிழ்ச்சி கலந்த சிரிப்பு அவரை குணப்படுத்தியது நன்றி...


 மகிழ்ச்சி கலந்த நன்றியுடன் கோபிநாத்

Saturday, September 16, 2017

சூப்பர் சேல்ஸ்மேன் (Super Salesman) ஆவது எப்படி



இனிய வணக்கம் நட்புக்களே...  
நம் இலக்கை எதிர்கொண்டு, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் பயணத்தில் நாம் முன்னேறிச் செல்ல முடியும். - ஆரிசன் ஸ்வெட் மார்டன்"
விற்பனை துறையில் உள்ள நன்பர்கள் இந்த பதிவுகளில் வரும் செயல் யிற்சிகளை print எடுத்து வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விற்பனை பற்றிய மன விளையாட்டு

செயல் பயிற்சிகள்

1.​இன்றே ஒரு முற்றிலும் தன்னம்பிக்கையுடைய, உயர் சுயமதிப்பு கொண்ட விற்பனையாளர் ஆவதற்கு முடிவெடுங்கள். 'என்னை நான் விரும்புகிறேன்' என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ளுங்கள்.

2.​உங்கள் தொழிலில் மிகச் சிறந்தவர் என்று தொடர்ந்து கற்பனை செய்து பாருங்கள்; நீங்கள் 'உருவாக்கிக் காண்கின்ற' மனிதராய் நீங்கள் இருப்பீர்கள்.

3.​என்ன நடந்தாலும் விட்டுக் கொடுப்பதில்லை என்று முன்னரே தீர்மானம் செய்யுங்கள். நீங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். தோல்வி ஒரு விருப்பத் தேர்வு அல்ல.

4.​நிராகரிப்பை தனிப்பட்ட முறையில் ஏற்க மறுத்திடுங்கள். விற்பனையில் இது நடப்பது இயற்கை, பருவ நிலை போன்றது என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

5.​உங்கள் துறையில் முன்னணியில் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள். மிக வெற்றிகரமான மற்றும் மிக உயர் ஊதியம் பெறுவோரை உங்கள் முன்மாதிரியாகக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கண்டுபிடியுங்கள். அதே பலன்கள் கிடைக்கும்வரை அவர்கள் செய்வதையே செய்யுங்கள்.

6.​உங்கள் தொழிலில் உள்ள உயர் 20 சதவீத மனிதர்களை சேர்வதென இன்றே ஒரு முடிவு செய்யுங்கள்; ஞாபகத்தில் வையுங்கள். உங்களைவிட வேறு எவரும் சமர்த்தர் இல்லை. உங்களைவிட சிறந்தவர் எவரும் இல்லை.அறிவுக்குப் பொருந்திய அளவில் யாரும் எதைசெய்திருந்தாலும், அதை உங்களாலும் செய்ய முடியும்.

7.​எந்த வழியிலாவது உங்களுக்கு உதவக்கூடிய புதிய யோசனை என்று நீங்கள் நினைத்தால், அதைச் செயல்படுத்திப் பாருங்கள்.ஒரு முயற்சி செய்து பாருங்கள்.மேலும் அதிகமானவற்றை நீங்கள் முயற்சி செய்தால் இறுதியில் வெற்றிபெறும் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்.

(from "THE PSYCHOLOGY OF SELLING (Tamil)" by BRIAN TRACY)

இந்த புத்தகத்தினை வாங்கி படிக்க :
  In Tamil : https://amzn.to/2GJQjDe
  In Engligh : https://amzn.to/2pW5Pl3

நன்றி.நன்றி..நன்றி....

Thursday, September 14, 2017

உங்களை சுற்றியுள்ள 7 விதமான நேர்மறைகள்

உங்களை சுற்றி நேர்மறையான ஆற்றல் நிறைந்து இருக்கிறது என்பதை அறிய பிரபஞ்சம் உங்களுக்காக அனுப்பும் ஏழு சிக்னல்கள்..... . நீங்கள் சரியான திசையில் தான் செல்கிறேர்கள் அல்லது சக்திவாய்ந்த அலைவரிசையில் தான் இருக்கிறேர்கள் என்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்காக அனுப்பும் ஏழு சிக்னல்கள் மூலம் புரிந்து கொள்ளுங்கள்.. .

1. நீங்கள் சாலையில் எதோச்சையாக பார்க்கும்போது வாகன ப்ளேட்டில் 1111, 333, 777, 1234 அல்லது டிஜிட்டல் கடிகாரத்தில் 11:11 , 12 : 34, 3:33 அல்லது டெலிபோன் எண்ணில் அல்லது எவற்றிலும் 000, 1111, 333, 777, 1234 இந்த எண்கள் உங்கள் கண்ணில் பட்டால் உங்களை சுற்றி நேர்மறையான ஆற்றல் நிறைந்து இருக்கிறது. நீங்கள் சக்திவாய்ந்த அலைவரிசையில் இருக்கிறேர்கள் . இந்த தனித்துவமான எண்களுக்கு சக்தி வாய்ந்த அலைவரிசைகள் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கபட்டு இருக்கிறது. .

2. நீங்கள் வானவில்லை கண்டாலும் நீங்கள் சக்தி வாய்ந்த அலைவரிசையில் இருக்கிறேர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. . வானவில்லுக்கு இயற்கையாகவே உங்கள் மனதில் சந்தோசத்தை அதிகபடுத்தும் மற்றும் உங்கள் மனதை அமைதிபடுத்தும் ஆற்றல் இருக்கிறது.. .

3. நீங்கள் எதோச்சையாக டிவி / ரேடியோ ஆன் செய்தாலும் உங்களுக்கு பிடித்த பாட்டு ஓடினாலும் .

4. நீங்கள் நினைத்த நபர் உடனே உங்கள் முன் வந்தாலும், அல்லது உங்களுக்கு போன் மூலம் அழைத்தாலும் .

5. நீங்கள் போக்குவரத்து சிக்னலில் நீங்கள் நிற்க அவசியமில்லாமல் நீங்கள் வந்த உடனே கிரீன் சிக்னல் இருந்தாலும் . மெதுவாக ஓட்டும் வண்டிகளுக்கு பின்னால் நீங்கள் தவித்து கொண்டிருக்காமல் சென்று கொண்டிருந்தாலும் . .

6. நீங்கள் வலிமையான நேர்மறையான உணர்வுகளை வெளிபடுத்தும்போது உங்கள் உடலில் ஒருவித குளிர் / புல்லரிப்பும் ஏற்பட்டாலும் .

7. நீங்கள் மனதில் எதாவது கேட்டாலும், கேட்காவிட்டாலும் அதற்கு இந்த பிரபஞ்சம் ஆட்டோ , லாரி கண்ணில் படும் (பின்னால் எழுதி இருக்கும்) வார்த்தைகள், கடை போர்டில் கண்ணில் படும் (பின்னால் எழுதி இருக்கும்) வார்த்தைகள், என எதாவது வழியாக விடை அளிக்கும், எதாவது செய்தி சொல்லும்... .

இந்த ஏழு சிக்னல்கள் உங்களுக்கு கிடைக்கும்போது பிரபஞ்சத்திற்கு மூன்று முறை நன்றி சொல்லுங்கள்....அது மேலும் மேலும் அவற்றை உங்களிடம் கொண்டு வரும் . நீங்கள் சரியான திசையில் தான் செல்கிறேர்கள் மற்றும் சக்திவாய்ந்த அலைவரிசையில் தான் இருக்கிறேர்கள் என்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்காக அனுப்பும் ஏழு சிக்னல்கள் மூலம் புரிந்து கொள்ளுங்கள்.. . 

Wednesday, September 6, 2017

உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்



உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்


ங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
.
நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்
.
நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மனஉளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ
உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்
.
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.
.
உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....
.
மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.
.
நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...
.
நன்றி ஆரோக்கியமே
நன்றி உடலே
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி
என்னை குணமாக்கியதற்கு நன்றி
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.
.
இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு ..
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.
.
1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது " என்பதை மனதிற்குள் சொல்லிகொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...
.
2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3.  நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்
.
4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.....அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்...எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ..அவ்வளவு மனபாரம் குறையும்...
.
5. காலை வேலையில் நியூஸ்பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....
.
6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்
.
7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்..இதன்மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்
.
தினமும் இதை செய்து பாருங்கள்...தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்.

Tuesday, September 5, 2017

நினைத்ததே நடக்கும்! - ஆழ்மனம்

🌻நினைத்ததே நடக்கும்!

💥ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

💥நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.

💥அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.

பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

💥அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

💥 வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்.

Monday, September 4, 2017

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்!

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்!


எல்லாவற்றையும் குறைகூறும் மனிதர்களின் தாக்கத்திலிருந்து தள்ளி இருங்கள். பல நேரங்களில் குறைகூறும் மனிதர்களின் கூற்றுகளில் நியாயம் இருக்கும். மறுப்பதற்கில்லை. ஆனால் தீர்வைப் பேசாமல், அதற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் உலகத்தைக் குறை கூறிக்கொண்டிருப்பது ஒரு வகை மனோ விகாரம்.

அந்த மனிதர்களிடம் தள்ளியிருங்கள். அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பஞ்சு போல உறிஞ்சிக்கொள்ளாதீர்கள். காந்தியும் காரல் மார்க்ஸும் பார்க்காத குறைகளையா நாம் உலகத்தில் பார்த்துவிடப் போகிறோம்? அதற்குப் பதிலாக ஏதாவது சிறிய அளவிலாவது ஏதாவது உருப்படியான செயலைச் செய்து பார்க்கலாம். அதுதான் வழி.


வெறும் குறைகூறுதல் வாழ்வின் நம்பிக்கையைப் போக்கடித்துவிடும்.

உங்கள் நண்பர் “எதுவுமே சரியில்லை....” என்று ஆரம்பித்தால், “நாம் என்ன செய்யலாம்” என்று பேச ஆரம்பியுங்கள்.

“எதுவும் முடியாது...” என்று பதில் வந்தால் அந்த உரையாடலை அங்கேயே ரத்து செய்துவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.


கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்தால் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் குறை தெரியும். அதில், நம்பிக்கை இழந்து தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைவிட மிகச் சிறிய நல்ல செயல்கள் புரியுங்கள். அது உங்கள் நம்பிக்கையையும் சுய மதிப்பையும் கூட்டும்.

“பூமிக்கு ஆபத்து. பூகம்பமும் சுனாமியும் வெள்ளமும் சகஜமாகப் போய்க் கொண்டிருக்கிறது.” “சரி, சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நீங்கள் உங்கள் அளவில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்!”

“திரைப்படங்களில் வன்முறை பெருகிவிட்டது” என்று புலம்புவதற்கு பதில் “நல்ல படங்களை தியேட்டரில் பார்த்து ஆதரவளிக்கலாமே நாம்!”

“அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சுரண்டுகிறார்கள்.” “அடுத்த தேர்தலில் மாற்று அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு ஊழல்வாதிகளைத் தோற்கடியுங்கள்! அல்லது நீங்களே ஒரு மாற்றாக மாறுங்கள்!”

“இந்த ஆபீஸ் வேலைக்கே ஆகாது. நாம தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம்!” “வேறு வேலை கிடைக்கும்வரை, இங்கு சிறப்பாக எப்படிப் பணியாற்றுவது என்று யோசியுங்கள்.”

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்.

ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்யலாம் என்று மட்டும் யோசியுங்கள். வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது.


நன்றி,

டாக்டர். ஆர். கார்த்திகேயன் (ஆசிரியர் உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர்),
மனசு போல வாழ்க்கை,
தி இந்து

Sunday, September 3, 2017

கோபம் நமக்கு எதற்கு - சிறு கதை

கங்கையில் நீராடி விட்டு காசி விஸ்வநாதரைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். துறவி ஒருவரும் அந்த கூட்டத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் நின்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய அழுக்கு ஆடை தவறுதலாக துறவியின் மீது பட்டுவிட்டது.கோபமடைந்த துறவி கையில் இருந்ததடியால் அவனை ஓங்கி அடித்தார்.“சண்டாளப்பாவி...! அபச்சாரம் செய்து விட்டாயே. உன்னால் நான் மீண்டும் ஒருமுறை கங்கைக்கு சென்று நீராட வேண்டுமே” என்று கோபமாக கத்தினார்.“உங்களால் நானும் கட்டாயம் கங்கையில் இன்று குளித்தாக வேண்டும்,” என்றான் பிச்சைக்காரன்.“என்னடா உளறுகிறாய்... துறவியான என் ஸ்பரிசம் உன் மீது பட்டதால் நீ புண்ணியம் தானே பெற்றாய்...!” என்று பெருமையாகச்சொன்னார் துறவி.அதற்கு அவன், “அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என்னை சண்டாளப்பாவி என்று திட்டினீர்களே...! உங்கள் மனதில் கோபம் என்னும் கொடிய சண்டாளன் குடி கொண்டிருக்கிறானே! அதனால் தானேஎன்னை தடியால் அடித்தீர்கள். ஒருவர் மனதில் என்ன உணர்வு இருக்கிறதோ, அதுவே எதிராளியைப்பாதிக்கிறது. அந்த பாதிப்பால் எனக்கும் கோபம் வந்து நாலு பேரை நிந்திக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கோபம்என்னும் பாவி என்னை அண்டாமலிருக்க கங்கையில் நீராட வேண்டும்,” என்றான்.அவன் கூறிய வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த துறவி பிச்சைக்காரனிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் ஒருமுறை கங்கையில் நீராடி, இனி கோபமே கொள்வதில்லை என உறுதி செய்து கொண்டார்.

நாம் தினமும் குளிக்கும் போது நாம் நினைக்க வேண்டியது.
என் உடலில் உள்ள அழுக்கு மட்டுமல்ல என் மனதில் என் மனதில் உள்ள அனைத்து அழுக்கு குணங்களும் கரைகிறது நன்றி இறைவா

நன்றியுடன் கோபிநாத்

Saturday, September 2, 2017

இனிய வணக்கம் நண்பர்களே...

மாத சம்பளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரம் மாதத்தில் முதல் 15 - 20 நாட்கள்

பிறகு பார்ஸை தேய்ப்பது

இந்த நிலை மாற

நீங்கள் உங்கள் சம்பளத்தை பெறும்போது அதற்காக நன்றியுடன், அன்புடன், மகிழ்ச்சியான நிலையில் இருங்கள், ... அது பல்கி பெருகும்.
.
பெரும்பாலான மக்கள் தங்கள் சம்பளத்தை பெறும்போது நன்றியுணர்வுடன், அன்புடன், மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை.
.
அடுத்த மாதம் முழுவதும் எப்படி ஓட்டுவது என்று கவலை பட தொடங்கிவிடுகின்றனர்.
.
அதனால் சம்பளம் பெறும் போது ஒவ்வொருங முறையும் அன்பை வெளிபடுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அவர்கள் இழக்கின்றனர்
.
வீட்டு வாடகை தரணுமே, எப்படி என் கடனை அடைப்பேன், இந்த மாசத்துக்கு குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் காலேஜ் பீஸ் கட்டணுமே என்ன செய்வேன், கேள்விகள் கேட்கும் மனநிலையில் இருந்து வெளியே வந்து விட்டாலே போதும்.
.
உங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு அதிகமான பணத்தை கவர்ந்து இழுப்பீர்கள்.
.
உங்கள் கையில் வரும்போது எவ்வளவு குறைவாக இருந்தாலும், அதற்காக நன்றியுடன், அன்புடன், மகிழ்ச்சியான நிலையில் இருங்கள், ... அது பல்கி பெருகும்.
.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை பெறும்போது நீங்கள் அதிகம் நேசிக்கும் உறவுகளுக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுங்கள். அல்லது அருகில் உள்ள குழந்தைகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவுங்கள்... அவர்களின் அன்பை உணருங்கள்
.
நீங்கள் கொடுக்கும்போது இதயத்தில் இருந்து கொடுங்கள். தியாகம் செய்வதாக கொடுக்காதீர்கள்..ங தியாகம் உங்களை இன்னும் பற்றக்குறையில் வைத்திற்கும்.
.
நீங்கள் பணத்தை அன்பாக வெளிபடுத்த கொடுக்கும்போது அன்பாக உணர்வீர்கள். மகிழ்ச்சியுடன் உணர்வீர்கள்.
.
அந்த அன்பும் மற்றும் மகிழ்ச்சியும் உங்களுக்கு பணத்தை , சம்பளத்தை அள்ளி தரும்..

நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்
😊கோபிநாத்.😊

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...