Flipkart Offer

Sunday, September 3, 2017

கோபம் நமக்கு எதற்கு - சிறு கதை

கங்கையில் நீராடி விட்டு காசி விஸ்வநாதரைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். துறவி ஒருவரும் அந்த கூட்டத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் நின்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய அழுக்கு ஆடை தவறுதலாக துறவியின் மீது பட்டுவிட்டது.கோபமடைந்த துறவி கையில் இருந்ததடியால் அவனை ஓங்கி அடித்தார்.“சண்டாளப்பாவி...! அபச்சாரம் செய்து விட்டாயே. உன்னால் நான் மீண்டும் ஒருமுறை கங்கைக்கு சென்று நீராட வேண்டுமே” என்று கோபமாக கத்தினார்.“உங்களால் நானும் கட்டாயம் கங்கையில் இன்று குளித்தாக வேண்டும்,” என்றான் பிச்சைக்காரன்.“என்னடா உளறுகிறாய்... துறவியான என் ஸ்பரிசம் உன் மீது பட்டதால் நீ புண்ணியம் தானே பெற்றாய்...!” என்று பெருமையாகச்சொன்னார் துறவி.அதற்கு அவன், “அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என்னை சண்டாளப்பாவி என்று திட்டினீர்களே...! உங்கள் மனதில் கோபம் என்னும் கொடிய சண்டாளன் குடி கொண்டிருக்கிறானே! அதனால் தானேஎன்னை தடியால் அடித்தீர்கள். ஒருவர் மனதில் என்ன உணர்வு இருக்கிறதோ, அதுவே எதிராளியைப்பாதிக்கிறது. அந்த பாதிப்பால் எனக்கும் கோபம் வந்து நாலு பேரை நிந்திக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கோபம்என்னும் பாவி என்னை அண்டாமலிருக்க கங்கையில் நீராட வேண்டும்,” என்றான்.அவன் கூறிய வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த துறவி பிச்சைக்காரனிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் ஒருமுறை கங்கையில் நீராடி, இனி கோபமே கொள்வதில்லை என உறுதி செய்து கொண்டார்.

நாம் தினமும் குளிக்கும் போது நாம் நினைக்க வேண்டியது.
என் உடலில் உள்ள அழுக்கு மட்டுமல்ல என் மனதில் என் மனதில் உள்ள அனைத்து அழுக்கு குணங்களும் கரைகிறது நன்றி இறைவா

நன்றியுடன் கோபிநாத்

1 comment:

  1. Sands Casino Resort: Hotel - Tunica, MS
    Find งานออนไลน์ your perfect match at Sands Casino Resort - the perfect place to recharge and unwind at one of our many luxurious deccasino hotel resorts. 샌즈카지노 We offer

    ReplyDelete

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...