Home Makeover Days

Home Makeover Days
UP TO 70 % OFFER ! | Tools & Home Improvements

Monday, September 4, 2017

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்!

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்!


எல்லாவற்றையும் குறைகூறும் மனிதர்களின் தாக்கத்திலிருந்து தள்ளி இருங்கள். பல நேரங்களில் குறைகூறும் மனிதர்களின் கூற்றுகளில் நியாயம் இருக்கும். மறுப்பதற்கில்லை. ஆனால் தீர்வைப் பேசாமல், அதற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் உலகத்தைக் குறை கூறிக்கொண்டிருப்பது ஒரு வகை மனோ விகாரம்.

அந்த மனிதர்களிடம் தள்ளியிருங்கள். அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பஞ்சு போல உறிஞ்சிக்கொள்ளாதீர்கள். காந்தியும் காரல் மார்க்ஸும் பார்க்காத குறைகளையா நாம் உலகத்தில் பார்த்துவிடப் போகிறோம்? அதற்குப் பதிலாக ஏதாவது சிறிய அளவிலாவது ஏதாவது உருப்படியான செயலைச் செய்து பார்க்கலாம். அதுதான் வழி.


வெறும் குறைகூறுதல் வாழ்வின் நம்பிக்கையைப் போக்கடித்துவிடும்.

உங்கள் நண்பர் “எதுவுமே சரியில்லை....” என்று ஆரம்பித்தால், “நாம் என்ன செய்யலாம்” என்று பேச ஆரம்பியுங்கள்.

“எதுவும் முடியாது...” என்று பதில் வந்தால் அந்த உரையாடலை அங்கேயே ரத்து செய்துவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.


கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்தால் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் குறை தெரியும். அதில், நம்பிக்கை இழந்து தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைவிட மிகச் சிறிய நல்ல செயல்கள் புரியுங்கள். அது உங்கள் நம்பிக்கையையும் சுய மதிப்பையும் கூட்டும்.

“பூமிக்கு ஆபத்து. பூகம்பமும் சுனாமியும் வெள்ளமும் சகஜமாகப் போய்க் கொண்டிருக்கிறது.” “சரி, சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நீங்கள் உங்கள் அளவில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்!”

“திரைப்படங்களில் வன்முறை பெருகிவிட்டது” என்று புலம்புவதற்கு பதில் “நல்ல படங்களை தியேட்டரில் பார்த்து ஆதரவளிக்கலாமே நாம்!”

“அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சுரண்டுகிறார்கள்.” “அடுத்த தேர்தலில் மாற்று அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு ஊழல்வாதிகளைத் தோற்கடியுங்கள்! அல்லது நீங்களே ஒரு மாற்றாக மாறுங்கள்!”

“இந்த ஆபீஸ் வேலைக்கே ஆகாது. நாம தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம்!” “வேறு வேலை கிடைக்கும்வரை, இங்கு சிறப்பாக எப்படிப் பணியாற்றுவது என்று யோசியுங்கள்.”

உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள்.

ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்யலாம் என்று மட்டும் யோசியுங்கள். வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது.


நன்றி,

டாக்டர். ஆர். கார்த்திகேயன் (ஆசிரியர் உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர்),
மனசு போல வாழ்க்கை,
தி இந்து

No comments:

Post a Comment

குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்!

  குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்! சிறிய விதைகள் , பெரிய மரங்களாக வளர்வது போல, நம் குழந்தைகள் நாளைய உலகின் முன்னோடிகளாக...