Flipkart Offer

Tuesday, August 29, 2017


ஆழ்மனத்தின் அற்புத சக்தி - டாக்டர் ஜோசப் மர்பி

அத்தியாயம் 7 :  ஆழ்மனத்தின் போக்கு வாழ்வின் உயிரோட்டம் குறித்ததே...

அன்பான சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விட்டுப்போன இரண்டு அத்தியாயங்களின் தொகுப்புகளையும் காணுவோம்.. நாமும் ஒரு புத்தகத்தை முழுதாக படித்து உணர்ந்ததாக இருக்கும் ..
1. உங்கள்  உடலை நிர்மாணிப்பதும் நிர்வகிப்பதும் உங்கள் ஆழ்மனம்தான் .அது ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்கிறது . உங்கள் எதிர்மறைச் சிந்தனையின் மூலம் நீங்கள் அதன் வாழ்வளிக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுகிறீர்கள்.

2. தூங்குவதற்கு முன் ஏதேனும் பிரச்னைக்கான விடையை உருவாக்கும் பணியை கொடுத்து உங்கள் ஆழ்மனத்தைத் தூண்டுங்கள் .அது உங்களுக்கான பதிலை அளிக்கும்..

3. உங்கள் எண்ணங்களை கவனியுங்கள் .உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வோர் எண்ணமும் , பெருமூளையால் உங்கள் ஆழ்மன மூளை அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு, உங்கள் புற உலக யதார்த்தமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

4. ஒரு புதிய வரைபடத்தை உங்கள் ஆழ்மனத்திற்கு வழங்குவதன் மூலம், நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதை அறியுங்கள்.

5. ஆழ்மனத்தின் போக்கு எப்போதும் வாழ்வின் உயிரோட்டம் குறித்தே அமைந்துள்ளது . உண்மையான விஷயங்களால் உங்கள்  ஆழ்மனதிற்கு ஊட்டமளியுங்கள் .உங்கள் ஆழ்மனம் எப்போதும் உங்கள் வழக்கமான எண்ண அமைப்புகளுக்கு ஏற்றாற்போன்ற அனுபவங்களையே உருவாக்கித்தரும் .

6. பதினோரு மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் ஒரு புதிய உடலைப் படிக்கிறீர்கள் . உங்கள் எண்ணங்களை மாற்றுவதன்மூலம் உங்கள் உடலை மாற்றுங்கள்.

7. ஆரோக்கியமாக இருப்பது இயல்பான நிலை. நோயுற்றிருப்பது இயற்கைக்கு மாறானது . உள்ளார்ந்த இணக்க கோட்பாடு நம்முள் உறைந்துள்ளது.

8. பொறாமை , பயம், கவலை மற்றும் மனக்கலக்கம் குறித்த எண்ணங்கள் உங்கள் நரம்புகளையும் சுரப்பிகளையும் வலுவிழக்கச் செய்யது அழித்து விடும். இதனால் , அனைத்து விதமான மன நோய்களும் உடற்பிணிகளும் ஏற்படும்.

9. விழிப்புணர்வுடன் வலியுறுத்தப்பட்டு , உண்மை என்று உணரப்படுவை உங்கள் மனத்திலும் , உடலிலும் சவெளிப்படுத்தப்படும். நல்லவற்றை வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வின் மகிழ்ச்சியில் திளையுங்கள்

நன்றி. நன்றி..நன்றி...

No comments:

Post a Comment

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...