Home Makeover Days

Home Makeover Days
UP TO 70 % OFFER ! | Tools & Home Improvements

Wednesday, October 11, 2017

ஒரு தொழில்முனைவோர்/ /வியாபார முதலாளி அவர்களுக்கான சுயபிரகடனங்கள்.

ஒரு தொழில்முனைவோர்/ /வியாபார முதலாளி  அவர்களுக்கான சுயபிரகடனங்கள்.
நூறு வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாண்மையான நம் மூதாதையர்கள் சின்ன சின்ன தொழில்முதலாளியாக , தொழில்முனைவோராக , விவசாயியாக , கைவினைஞர்களாக இருந்தனர். மிக மெதுவாக ஆங்கிலேய கலாச்சாரம் மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரம் எல்லாம் வந்தபிறகு சொந்த தொழில் செய்வதற்கு பதிலாக தொழிலாளியாக இருப்பதில் சுகம் கண்டோம். பிறகு இணைய புரட்சி மற்றும் உலகமயமாதலினால் வேலை இழப்பு , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகி மன அழுத்தம்  ஆகியவை தோன்றுகின்றது.. ஆகவே இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் அவர்களது எண்ணங்கள் மற்றும் சக்தியை தொழில்துவங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த சுயபிரகடனங்கள்  அனைத்துமே வைகறையில் எழுபவர்களுக்கு, எந்த அளவுக்கு மெல்ல முடியுமோ அதைவிட அதிகமாக கடிப்பவர்களுக்கு , வேலையை முடிப்பவர்களுக்கானது.
1. எனக்குள் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அவன்தான் என்னுடைய தொழிலை நடத்துகிறான்!
2. எனது வெற்றிக்கான சூத்திரம் என்னிடம் உள்ளது. அவற்றை எல்லாமே செயல்படுத்துவது என் முதல் வேலை!
3. என்னுடைய திட்டங்களை நான் நம்புகின்றேன். நான் அதை சந்தைக்கு கொண்டுவந்து வெற்றிபெறுவேன்!
4. எனக்கு என் வாடிக்கையாளர்களின்  தேவைகள் தெரியும் அவற்றை நிறைவேற்றுகிறேன். எனக்கு என் வாடிக்கையாளர்களின்  எதிர்பார்ப்புகள் தெரியும், அவற்றையும் நிறைவேற்றுகிறேன்!
5. நான் ஒரு தொலைநோக்கு உள்ளவன். வருங்காலத்தில் நடக்கும் வியாபார போட்டிகளின் போக்கை நான் பார்க்கிறேன்!
6. ஒவ்வொரு நாளும் நீண்டகால வியாபார வெற்றிக்கான அடித்தளத்தை நான் பலமாக்குகிறேன்!
7. நான் சரியான நேரத்தில் சரியான தொழிலில்   சரியான ஒரு குறிக்கோளோடு இருக்கிறேன்.. அதை நான் முதலாக்குவேன்!
8. ஒவ்வொரு நாளும் என்னுடைய தொழிலும் நானும் கற்றுக்கொண்டே வளர்க்கிறோம்!
9. இன்றும் என்றென்றும் ,எனது தொழில் எப்பொழுதும் வளரும் வருமான ஊற்றை உற்பத்தி செய்கிறது!
10. என் திறமைகளை நம்புகின்றேன். என்னுடைய உள்ளுணர்வுகளை நம்புகின்றேன்!
11. என்னுடைய தொழிலை தீர்மானங்களோடும் நேர்மையோடும் வளர்க்கிறேன்!
12. இன்று புது வாடிக்கையாளர்களை எதிர்பாராத திசையிலிருந்து  கவர்கிறேன் !
13. இன்று சும்மா இருப்பதற்கு ஒரு தொழில் துவங்குவது நல்லது என்று நான் நினைவு கூர்கிறேன்!
14. அறிவு என்பது ஒரு நுகர்பொருள், அதன் கண்டுபிடிப்பும் கற்பனையும் என்னை வியாபார போட்டியிலிருந்து மிகவும் வெற்றியடைய வைக்கிறது!
15. ஒவ்வொருநாளும் நான்  இருக்கும் துறையில் நான் ஒரு நிபுணர்  என்பதை நிரூபிக்கிறேன்!
16. ஒவ்வொரு நாளும் என்தொழில் செழித்தோங்குகிறது!
17. இன்று குறைவற்ற வகையில் எனது வியாபார செயல்திட்டங்களை செயல்படுத்துகிறேன் , அதில் வெற்றியும் அடைகிறேன்!.
18. எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இன்று நிறைய திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை  என்னுடைய நிறுவனம் கொண்டுள்ளது!
19. சிறப்புதான் என் தொழில் தர அடையாளம் .அதற்கான என் அர்ப்பணிப்பு அசையாதது!
20. என்னுடைய உயர்ந்த பார்வை  வெற்றியின் அடித்தளத்தையே ஓட்டுகிறது!
21. என்னுடைய தொழில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வருடம் இது ஒரு மிகப்பெரிய வெற்றியடையும்!
22. என் தொழிற்சாலையில் நான் ஒரு சிந்தனையுள்ள தலைவன். எப்பொழுதும்   வெற்றிக்காக  புதுமையை புகுத்துகிறேன் !
23. ( உங்கள் தொழில்) தான் என் பேரின்பம் , இந்த பேரின்பத்தை நான் மற்றவர்களுடன் பகிரும்பொழுது மேலும் வெற்றி கிடைக்கிறது!
24. நேர்மையான வெற்றிக்கு ஒரு உதாரணமாக இன்று அனைத்து தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறேன்!.
25. என்னுடைய தொழிலின் வெற்றி  உறவுகளைச்சார்ந்துள்ளது . இன்று நான் திடமான உறவுகளை வளர்க்கிறேன்!
26. சரியாக இப்பொழுது நான் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறேன் , அதுதான் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும்!
27. இன்று ஒரு தொழிலுக்கான அடித்தளம் அமைக்கிறேன் அவை ஒரு நாள் என்னை உலகத்தின் பார்வைக்கு இட்டுச்செல்லும்!
28. இன்று என்னுடைய திறமைகளும் என்னுடைய தயாரிப்புகளும் ஒன்று சேர்ந்து ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்கும் !
29. என் மனதின் அனுமதிக்கேற்ப என்னுடைய தொழில் வெற்றிநடைபோடுகிறது.இன்று நான் திறந்த மனதுடன் ஒரு மாபெரும் வெற்றிக்காக தயாராக இருக்கிறேன்.
30. எனக்காகவே ஒரு மாபெரும் வியாபாரத்திட்டம் என்னால் போடமுடியும் !.
31. நான் கண்ட கனவு போலவே என்னுடைய வியாபார வெற்றி உச்சத்தை நோக்கி செல்கிறது..
32. நான் புத்திசாலி. ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர்.!

உங்கள் பிறவிநோக்கத்தை அறியுங்கள்
உங்கள் பேரானந்தத்தை பின்பற்றுங்கள் !
பேரானந்தத்தை அனுபவியுங்கள் !!
பேரானந்தமாக இருங்கள்!!


உங்கள் நண்பர்களும் share செய்யுங்கள்

நன்றி நன்றி நன்றி....



No comments:

Post a Comment

குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்!

  குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்த்துகள்! சிறிய விதைகள் , பெரிய மரங்களாக வளர்வது போல, நம் குழந்தைகள் நாளைய உலகின் முன்னோடிகளாக...