கற்பனை தான் எல்லாம்
அது வாழ்க்கையில்
வரப் போகும் வசந்தங்களின்
முன்னோட்டம்
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கற்பனை தான் படைப்பின் துவக்கம்.
நீங்கள் விரும்பும் ஒன்றை மிக ஆழமாகவும்,
துல்லியமாகவும் கற்பனை செய்யுங்கள். நீங்கள் விரும்பியது உங்களது வாழ்வில் நடந்து விட்டதாக
கற்பனை செய்யுங்கள்.
ஒருவர் ஒரு சூப்பர் மார்கட் (
SUPER MARKET) நடத்த விரும்புகிறார். அந்த விருப்பத்தை அவருக்கு நிறைவேற்றியது அவரது
கற்பனைதான்.
ஒரு குறிப்பட்ட நாட்களுக்குள் அவரது
விருப்பம் நிறைவேறிவிட்டதாக கற்பனை செய்தார்.
எனது சூப்பர் மார்கெட்டிற்க்கு
அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது சூப்பர் மார்கெட்டில் உள்ள பொருட்கள் மிக
தரமானதாகவும், வாடிக்கையாளர்களின் மனதிற்க்கு இதமானதாகவும் இருப்பதால் நான் அதிக வாடிக்கையாளர்களை
ஈர்க்கிறேன். எனது கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் எனது வியாபாரம் அமோகமாக
நடைபெறுகிறது.
“ நேற்றைவிட இன்று எனது தொழில்
மிக சிறப்பாகவும் ஆனந்தமாகவும் லாபகரமாகவும் நடைபெற்றதற்க்கு ஆத்மார்தமான நன்றி நன்றி
நன்றி…”
கற்பனை
செய்யுங்கள் உங்கள் தொழிலை உயர்த்துங்கள் ...
அன்புடனும் நன்றியுணர்வுடனும்
கோ. கோபிநாத்
உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ...
Main Page
No comments:
Post a Comment