மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்


மனஅழுத்தம் குறைக்க சில வழி முறைகள்

மனஅழுத்தம் குறைக்க சில
வழி முறைகள்.

இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாதுஎன்று சொல்லப்பழகுங்கள்.

காலை நேர நடைபயிற்சி செய்யுங்கள் மனதிற்க்கு புத்துணர்வு தரும்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். இனிமையான பாடல்களை கேட்பது, நகைசுவையுணர்வு, அமைதி, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடுங்கள்.

பிறருக்காக எதையேனும உதவி  செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


அனைத்து மனஅழுத்தத்திற்க்கு மாபெரும் மந்திர சொல் - 


அனைத்தும் கடந்து போகும்.
(அன்று)

எவ்வளவே பார்த்துட்டேம் இத பார்க்க மாட்டேமா!!! 
(இன்று)

நடிகர் பிரேம்ஜி வசனம்.

நீங்கள் மன அழுத்தம் அடையும் போது இதனை நினைத்து பாருங்கள் உங்கள் வாழ்வில் மாயாஜாலம் நிகழும்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்...!

அன்புடனும் மகிழ்ச்சியுடனும்

கோபிநாத்.

Thanks To share Your Friends

Post a Comment

Previous Next

نموذج الاتصال