பணத்தைப் பெற
பணத்தைக் கொடுங்கள்!

உங்கள் வாழ்வில் மேலும் அதிகமான பணத்தை கொண்டுவர மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை பணத்தை பிறர்க்குக் கொடுத்து உதவுவது. ஏனெனில் நீங்கள் கொடுக்கும் பொழுது என்னிடம் ஏராளமாக பணம் இருக்கிறது அதனால் நான் மற்றவர்களுக்கு உதவிகிறேன் என்று எண்ணுகிறீர்கள் அந்த எண்ணம் உங்களிடம் பணத்தை கவர்ந்திழுக்கிறது. இவ்வுலகில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்கள் மிகப்பெரிய நன்கொடையாளர்களாகவும் இருப்பதை அறியும் போது நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்கள் மிகப் பெரிய தொகையை தானமாக அளிக்கின்றனர். அவர்கள் அப்படிக் கொடுக்கும்போது ஈர்ப்பு விதியால் பிரபஞ்சம் அவர்கள் கொடுத்ததைவிட பன்மடங்கு அதிகமான பணத்தை வெள்ளமென அவர்களிடம் கொண்டு வந்து சேர்கிறது.
"என்னிடம் கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை" என்று சிந்திப்பவரா நீங்கள்? அடடா! உங்களிடம் ஏன் போதுமான பணம் இருப்பதில்லை என்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் கொடுக்க தூங்குங்கள் கொடுப்பது குறித்த உங்கள் நம்பிக்கையை நீங்கள் உணரும் பொழுது ஈர்ப்பு விதி இன்னும் அதிகமாக மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்.
நன்றியுடன்
கோ.கோபிநாத்.
No comments:
Post a Comment