Flipkart Offer

Thursday, July 20, 2017

ஆழ்மனத்தின் அற்புத சக்தி" -டாக்டர் ஜோசப் மர்பி
அத்தியாயம் நான்கு : புராதான மனநல மருத்துவம்

1. குணமாக்கும் சக்தி உங்கள் ஆழ்மனத்தில் உள்ளது என்பதை உங்களுக்கு நீங்களே பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

2. நன்றியுணர்வு என்பது நிலத்தில் ஊன்றப்பட்ட விதையைப் போன்றது. ஓரு கருத்தென்னும் விதையை உங்கள் மனத்தில் விதையுங்கள், எதிர்பார்ப்புடன் அதற்கு நீரூற்றி உரமிடுங்கள்; அது செழித்து வளர்ந்து வெளிப்படும்.


3. ஒரு புத்தகம், புதுக் கண்டுபிடிப்பு, அல்லது நாடகம் குறித்த உங்களது எண்ணம் உங்கள் மனத்தில் உண்மையான உருவமாக உள்ளது. அதனால், அது உங்களிடம் இப்போதே இருக்கின்றது என்பதை நீங்கள் நம்பத் தலைப்படலாம். உங்கள் எண்ணம், திட்டம், அல்லது கண்டுபிடிப்பின் வெளிப்பாட்டில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், அது நிச்சயமாகப் புற உலகில் தோன்றும்.

4. மற்றவர்களுக்காகப் பிரார்த்திக்கும்போது, முழுமை, அழகு, கச்சிதம் ஆகியவை குறித்த உங்களது அமைதியான உள்ளார்ந்த அறிவு, அடுத்தவருடைய ஆழ்மனத்திலுள்ள எதிர்மறையான எண்ண அமைப்புகளை மாற்றி அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.


5. பல்வேறு புனிதத் தலங்களில் ஏற்பட்டதாக நாம் கேள்விப்படும் அதிசயக் குணமாதல்கள் அனைத்தும், ஆழ்மனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் குணமாக்கும் சக்தியை விடுவிக்கும் கற்பனையாலும் கண்மூடித்தனமான நம்பிக்கையாலும்தான் விளைகிறது.

6. எல்லா வியாதிகளும் நம் மனத்தில்தான் உருவாகின்றன. நம் மனத்தில் அதற்கான ஓர் எண்ண ஓட்டம் இல்லாமல், நம் உடலில் எதுவுமே ஏற்படுவதில்லை.


7. மனவசியத் தூண்டுதல் மூலம் எந்த ஒரு வியாதிக்கான அறிகுறியையும் உங்களிடத்தில் ஏற்படுத்த முடியும். இது உங்கள் எண்ணத்திற்கு இருக்கும் சக்தியைத் தெளிவாகக் காட்டுகிறது.

8. ஒரே ஒரு குணமாக்கும் செயல்முறைதான் உள்ளது அதுதான் நன்றியுணர்வு (விசுவாசம்). ஒரே ஒரு குணமாக்கும் சக்திதான் உள்ளது. அதுதான் உங்களது ஆழ்மனம்.


9. நீங்கள் நன்றியுணர்வு (விசுவாசம்) கொண்டிருக்கும் பொருள் உண்மையானதோ இல்லையோ, நீங்கள் விளைவுகளைப் பெறுவது உறுதி. உங்கள் வெளிமனத்தின் எண்ணத்திற்கேற்ப உங்கள் ஆழ்மனம் செயல்விடை அளிக்கும். நன்றியுணர்வை  (விசுவாசத்தை) உங்கள் மனத்தின் ஓர் எண்ணமாகப் பாருங்கள். அது மட்டும் போதும்."

நன்றி : டாக்டர் ஜோசப் மர்பி.
ஆழ்மன அற்புத சக்தி.

No comments:

Post a Comment

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ...

வணக்கம் நண்பர்களே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக சுயபிரகடனம் (நான் என்பதற்க்கு பதிலாக நாம் / அனைவரும் / எல்லோரும் என ம...